பகுதி நேர நூலகங்கள் திறக்க

பொது நூலகத் துறையில்  பகுதிநேர நூலகங்கள் திறப்பதற்கான வழிமுறைகள் 

பொது நூலக இயக்ககம் சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 1000 மக்கள் தொகை கொண்ட நூலகங்கள் இல்லாத கிராமங்களில், பொதுமக்களின் அத்தியாவசிய பயன்பாட்டினை பூர்த்தி செய்யும் வகையில், அந்தந்த  ஊர் பொது மக்கள்  / ஊராட்சி மன்ற தலைவர் ஒத்துழைப்புடன் கீழ்க்காணும் நிபந்தனைகள் பூர்த்தி செய்து பெறப்பட்டு  பகுதிநேர நூலகங்கள் திறக்கப்படுகின்றன.
நிபந்தனைகள்
(i)  நூலகம் செயல்பட  வாடகையில்லா இலவசக் கட்டடம் நூலக   ஆணைக்குழுவிற்கு  வழங்கப்பட வேண்டும்.
(ii)  சொந்தக் கட்டடம் கட்ட 5 சென்ட் காலிமனை நூலக       ஆணைக்குழுவிற்கு இலவசமாக பத்திரப்பதிவு செய்து   பெறப்பட வேண்டும்.
(iii)  தலா ரூ.1,000/- வீதம் நன்கொடையாக செலுத்தி 2 நபர்கள்  புரவலர்களாக சேர்க்கப்பட வேண்டும்.
(iv)  நூலக உறுப்பினர் காப்புத் தொகை ரூ.20/-ம் ஆண்டு சந்தா  ரூ.10/- ஆக மொத்தம் ரூ.30/- செலுத்தி 200 நபர்கள் நூலக   உறுப்பினர்களாக  சேர்க்கப்பட வேண்டும்.(v)  சுமார் ரூ.2,000/- மதிப்புள்ள தளவாடங்கள் இலவசமாக  வழங்கப்பட வேண்டும்.